MARC காட்சி

Back
அம்மன் கோயில்பட்டி
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a அம்மன் கோயில்பட்டி
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a இரண்டு வரிகளில் இக்கல்வெட்டுள்ளது. சுனைக்கு வடியும் மழைநீர் மற்றும் வெய்யில் காரணமாகக் கல்வெட்டு தேய்ந்துள்ளது, எனினும் படிக்கும் அளவு தெளிவாகத் தெரிகிறது. 'ர’ , ‘க’ முதலிய கீழ்நீளும் கோடுகளை உடைய எழுத்துக்களில் கீழ்க்கோடு இடப்புறம் வளைந்து தூண்டில் முள்போல உள்ளது. எனவே இக்கல்வெட்டு தென்பிராமி எழுத்துச் சாயல் உடையதாக ஐ. மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். இக்கல்வெட்டு சுமார் கி.பி. நான்காம் நூற்றாண்டு எனலாம். “பரம்பன் கோகூர் கிழார் மகன் வியக்கன் கோபன் கணதேவன் தொட சுனை“ என்பது கல்வெட்டு வாசகம். கணதேவன் என்பதில் ‘ண்’ மெய் சேர்த்து கண்ணதேவன் என்றும் ‘தொட’ என்பதில் 'ட்' மெய் சேர்த்து ‘தொட்ட’ என்றும் கொள்ளவேண்டும். பரம்பன் கோகூர் என்ற ஊரின் கிழாரின் மகன் வியக்கன் கோபன் கண்ணதேவன் இந்த சுனையைத் தோண்டுவித்தான் என்பது இதன் பொருள். கோகூரின் கிழாரான பரம்பன் என்றும் தந்தையின் பெயரைக் கருத இடமுள்ளது. பரம்பன் என்ற சொல் வரம்பன் என்று படித்து இமயவரம்பன் என்ற சேரமன்னனுடன் சில ஆய்வாளர்களால் தவறாகச் சொல்லப்பட்டுள்ளது. தென்பிராமி சாயல் பெற்ற எழுத்துக்கள் உடைய தமிழ்-பிராமி கல்வெட்டு இது. இக்கல்வெட்டு சுனை பற்றிச் சொல்கிறது. சமணச் சார்புடைய அறம் அல்லது செயலைக் குறிக்கவில்லை. இக்கல்வெட்டை சமயச்சார்பற்ற கல்வெட்டாகக் கருதவேண்டும். கோகூர் என்பது கோவூர் என்பதுடன் தொடர்புடையது போலத் தெரிகிறது. ஐ. மகாதேவன் கோங்கு மரத்தின் அடிப்படையில் கோங்கூர் - கோகூராகியிருக்க வேண்டுமெனக் கருதுகின்றார். 'குளம் தொட்டு வளம் பெருக்கி’ என்ற பட்டினப்பாலை வரியும் (பட்டின. 284), ‘தொட்டனைத்து ஊறும் மணற் கேணி’ என்ற குறளடியும் இக் கல்வெட்டில் வரும் தொட (தொட்ட) என்ற வினைச் சொல்லை நினைவுபடுத்துகின்றன. 'ஊழ்படு பாறை நெடுஞ்சுனை’ என்ற அகப்பாடல் அடி (அகம் 2:3-4) தொன்மையான பாறையில் அமையும் சுனையைக் குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது. வியக்கன் என்பது விசாக நட்சத்திரத்தின் அடிப்படையிலான ஆட்பெயர். இயக்கன் (யக்சன்) வியக்கனுடன் தொடர்புடையது போல இருப்பினும் சான்றுகள் இல்லை. கோபன்-விஷ்ணு கோபன் என்று ஆட் பெயரில் உள்ளது போலவாகும். 'கோப' என்ற சொல் ‘பாதுகாப்புத் தருபவன்’ என்ற பொருளுடையது.
653 : _ _ |a அம்மன் கோயில்பட்டி, ஓமலூர்க் கல்வெட்டு சேலம் மாவட்டக் கல்வெட்டு, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a தேப்பாலி-சுனை |c அம்மன் கோயில்பட்டி |d சேலம் |f ஓமலூர்
914 : _ _ |a 9.1735285
915 : _ _ |a 77.8532973
995 : _ _ |a TVA_INS_000080
barcode : TVA_INS_000080
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000080/TVA_INS_000080_அம்மன்-கோயில்பட்டி_குகைத்தளம்-001.jpg